இன்னும் 1 மணி நேரம் தான் இருக்கு….இப்படியா செய்வாங்க தல ரசிகர்கள்…!!
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் விஸ்வாசம்.அஜித்தின் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. பொங்கலுக்கு வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக இருப்பதை அடுத்து அஜித் ரசிகர்கர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக டிவீட்டரில் #ViswasamTrailerFromToday என்ற ஹேஷ்டக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது.
இந்நிலையில் இன்று 1.30 மணிக்கு விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரை வரவேற்கும் விதத்தில் இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே உள்ளது என்று மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள் சுவரொட்டி ஓட்டி மகிச்சியடைகின்றனர்.இன்னும் ஒரு மணி நேரம் உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் செய்த இந்த செயல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.