Star : கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் கவின் கடைசியாக ‘டாடா’ படத்தில் நடித்து இருந்த நிலையில் அந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக கவின் இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள்.
இயக்குனர் இளன் பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஏற்கனவே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக அவர் கவினை வைத்து ஸ்டார் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
டிரைலரில் வரும் காட்சிகளும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கேட்பதற்கும் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. டிரைலரை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படமும் கவினுக்கு பிளாக் பஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்க்கு ட்ரைலருக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…
உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர்…