வெற்றி நாயகனாக ஜெயித்தாரா கவின்? கனவுகளுடன் STAR திரைப்படம் எப்படி இருக்கு?
Star movie review : நடிகர் கவின் நடிப்பில் நேற்று வெளியான ‘ஸ்டார்’ பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். மேலும், படத்தில் கவின் தவிர, இந்தப் படத்தில் பிரபல நடிகர் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரூ.12 கோடி செலவில் தயாரான இப்படம் முதல் நாளில் ரூ.3.5 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இப்பொது, நாயகனாக அனைவரது மனதையும் வென்றாரா? இல்லையா என்று விமர்சனம் குறித்து பார்க்கலாம்.
படத்தின் கதை
நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், சினிமாவில் நடிகனாக, ஸ்டாராக உருமாறினானா? இல்லையா? என்பதே ‘ஸ்டார்’ படத்தின் கதை.
திரை விமர்சனம்
படத்தில் கலை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் கவின் ஒரு நடிகனாக வேண்டும் என்று கனவுடன், சிறு வயதிலிருந்தே தனது போராட்டத்தை ஓடுகிறார். படத்தின் நாயகன் அப்பாவாக லால், கவின் அம்மா கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்திருக்கிறார்கள். கலை சிறுவயதில் இருந்து சினிமாவின் மீது தீராத காதல்.
எப்படியாவது சினிமாவில் பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவருக்கு உறுதுணையாக அவருடைய தந்தையும் இருக்கிறார்.ஒரு கட்டத்தில் பள்ளி, கல்லூரி என தனது திறமைகளை மேடையில் காண்பித்து, நடிப்பு வாய்ப்புக்காக முயற்சி செய்கிறார். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை.
பின்னர் முதலில் ஒரு காதலி வருகிறார், சிறு நாட்களில் அதுவும் முடிவடைகிறது. பின்னர், வாய்ப்புக்காக மும்பை கிளம்புகிறார், ஒரு வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில் விபத்து ஏற்படுகிறது. முகத்தில் காயங்களுடன் துவன்று பொய் நிற்கும் கலை, இனிமேல் நடிக்கவே முடியாதா என நினைக்க, நடிப்பை மறந்து வேலை பார்க்க தொடங்குகிறார்.
அப்பொழுது, இரண்டாவதாக பள்ளி பருவ காதலி வருகிறார். இப்படியே சென்று கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அவரே நடிப்பை மறக்க முயற்சித்தாலும், அவரது கனவு விடவில்லை. விடமால் தொரத்துகிறது. மொத்தத்தில் படம் முழுக்க காதல், கண்ணீர், வேதனை, பாசம் என அனைத்து எமோஷன்களும் கலந்திருக்கிறது.
ஒற்றே ஆளாக கவின் படத்தை எடுத்து சென்று விட்டார் என்று சொல்ல முடிந்தாலும், அவருடன் லால் முக்கால் வாசி பங்கு வகுத்திருக்கிறார். அது மட்டும் இல்ல, அவருடை தாயும் கூட தான். அடுத்ததாக படத்தில் இரண்டு ஹீரோயின்கள் மீரா (ப்ரீத்தி முகுந்தன்) மற்றும் சுரபி (ஆதிதி பொஹங்கர்) இருப்பது போல், இரண்டாவது ஹீரோ யுவன் தான்.
இசையை தாரக மந்திரமாக பொருத்தி காட்டியுள்ளார், பாடல்கள் அனைத்தும் சிறப்பு. இயக்குனர் சரியாக சொல்ல வேண்டியதை சரியாக சொல்லி புரிய வைத்துள்ளார். எல்லாமே சரியா அமைஞ்சிருக்கு, கட்டாயம் பார்க்க வேண்டிய படம். ஒரு முறை பார்க்கலாம்.
பிளஸ்:
படத்தின் முக்கியமான ப்ளஸ் என்றால் படத்தில் இடம்பெற்ற எமோஷனலான காட்சிகள் ஒன்று. மற்றோன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, பாடல்கள் தான்.
அந்த அளவுக்கு எமோஷனலான காட்சிகளை எல்லாம் பின்னணி இசையை வைத்தே மக்களை எமோஷனலாக்கி இருக்கிறார். படத்தை வைத்து அவர் தான் இரண்டாவது ஹீரோ என்றெ சொல்லலாம்.
மைனஸ்:
படத்தின் மைனஸ் என ஒன்று சொல்ல முடியாது. ஒரு சில காட்சிகளில் ஆங்காங்கே தொய்வுகள் இருந்தாலும், திரைக்கதை படத்தின் வேகத்தை குறைக்கவில்லை.