ஸ்டார் ஹிட்டா? பிளாப்பா? பட்ஜெட் முதல் வசூல் வரை இதோ!
ஸ்டார் : கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் படமாகி இருக்கிறது.
இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் கடந்த மே 10-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் “ஸ்டார்”. இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில், எதிற்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே சொல்லலாம்.
இருப்பினும் படம் வெளியாகி பல நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் பட்ஜெட் என்ன படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது அதனை வைத்து படம் ஹிட்டா? அல்லது பிளாப் பா என்பதற்கான தகவலும் கிடைத்திருக்கிறது.
அதன்படி, ஸ்டார் படம் மொத்தமாக 6 லிருந்து 7 கோடி வரை பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட்டை தாண்டி படம் வசூல் செய்துள்ள காரணத்தால் படம் கண்டிப்பாக ஹிட் படம் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த ஸ்டார் திரைப்படத்தில், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.