Aranmanai 4 vs STAR : ஸ்டார் திரைப்படம் வெளியான முதல் நாளில் அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்க தவறியுள்ளது.
கவின் நடிப்பில் உருவான ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு முன்பு கவின் நடிப்பில் வெளியான டாடா படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருந்த நிலையில், இந்த ஸ்டார் படமும் அவருக்கு அடுத்த பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது. ஏனென்றால், ஸ்டார் படம் அந்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த ஸ்டார் படத்தினைபியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் தான் இயக்கி இருந்தார். படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுதன், கீதா கைலாசம், லொள்ளு சபா மாறன், பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைப்போலவே, படத்திற்கு முதல் நாளில் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைத்து இருக்கிறது. அதன்படி, படம் முதல் நாளில் மட்டும் 2.7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் முதல் நாளில் 1 கோடி வரை தான் வசூல் செய்து இருந்தது.
ஆனால், ஸ்டார் படம் அதனை மிஞ்சும் அளவிற்கு ஒரே நாளில் 2.7 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. இருப்பினும், ஸ்டார் படம் அரண்மனை படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஸ்டார் படத்தால் அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்க முடியவில்லை. அரண்மனை 4 படம் வெளியான முதல் நாளில் 4 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…
வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று…
கர்நாடகா : தினம் தினம் வித்தியாசமாக சிலர் வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தில் நிவாரணம் கோரி அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வரும்…
சென்னை: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் சி மற்றும்…