7 வருடம் கழித்து மீண்டும் ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட உள்ள சூப்பர் ஸ்டார் திரைப்படம்!
தெலுங்கு சினி உலகில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் தான் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் படம் வெளியானால் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள்.
அவரது தனது 44வது பிறந்தநாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாட உள்ளார். இவரது பிறந்தநாளை ரசிகர்களும் பிரமாண்டமாக கொண்டாட தயராகிவிட்டனர். இவரது பிறந்தநாளன்று, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போனில் உள்ள திரையரங்கில் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6.30க்கு மகேஸ் பாபு நடித்து வெற்றிபெற்ற பிசினஸ்மேன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.