ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா! கலாய்க்கும் நெட்டிசன்கள்..ஆதரவாக இறங்கிய ரசிகர்கள்!

பிக் பாஸ் ஹிந்தி சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருத்திகா குழந்தை தனமாக பேசி நடிப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ShrutikaRaj Arjun

சென்னை : தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்களுக்கு ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைப்பது எல்லாம் சாதாரணமா விஷயம் இல்லை. ஏனென்றால், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் கண்டிப்பாக ஹிந்தி படங்களில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படியான அதிர்ஷ்டம் ஒரு சில பிரபலங்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது.

அந்த வகையில், இந்த முறை பிக் பாஸ் சீசன் 18 ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் பிரபல நடிகையான ஸ்ருத்திகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு ரசிகர்களுடைய ஆதரவு வேண்டும் என வீடியோ வெளியீட்டு இருந்தார். ஒரு பக்கம் தமிழ் சீசனை விட்டு எதற்காக ஹிந்திக்குச் செல்கிறார்? என்ற கேள்வி எழுந்து.

மற்றொரு பக்கம் அப்படியான கேள்விகள் எழுந்தாலும் ரசிகர்கள் அவருக்கு நிகழ்ச்சியில் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். வாழ்த்து மழையுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்ற ஸ்ருத்திகாவுக்கு தெலுங்கு ரசிகர்களுக்கு மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. அவரை சமூக வலைத்தளங்களில் கலாய்த்துப் பதிவிட்டு வருகிறார்கள்.

நிகழ்ச்சிக்குள் சென்றவுடன் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சல்மான்கான் குறித்து ஸ்ருத்திகா தன்னுடைய பாணியில் குழந்தைத் தனமாகப் பேசினார். அதாவது தன்னுடைய ட்ரிம் பாய் நீங்கள் தான்..உங்களுடைய முன்னாள் நிற்பது மகிழ்ச்சியாக” இருக்கிறது எனத் தனது பாணியில் பேசினார்.

உண்மையிலேயே, ஸ்ருத்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூட குழந்தைத் தனமாகப் பேசுவார். அது நிகழ்ச்சிக்காக அவர் அப்படிப் பேசவில்லை உண்மையிலேயே அவருடைய குணமே அப்படி தான் என்பதை பார்க்கும் போதே நமக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால், அதனைப் புரிந்து கொள்ளாத பலரும் ஸ்ருத்திகா குழந்தைத் தனமாகப் பேசி நடித்து மக்களைக் கவரப் பார்க்கிறார் எனவும், இவர் எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தார் எனவும் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகிறார்கள். இதனையடுத்து, பொங்கி எழுந்த தமிழ் ரசிகர்கள் அவர் நடிக்கவில்லை அவருடைய குணமே எப்போதும் அப்படி தான் அவரை கலாய்க்க வேண்டாம் எனக் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்