சிறகடிக்க ஆசை சீரியல் ..விஜயாவை வறுத்தெடுத்த சுருதி..!

siragadikka asai 23

சிறகடிக்க ஆசை இன்று– சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான கதைக்களத்தை இங்கே காணலாம்.

மனோஜ் அண்ணாமலை இடம் அம்மா எங்கப்பானு கேக்குறாரு. அதுக்கு அண்ணாமலை சொல்றாரு என்கிட்ட வந்து கேக்குற நீங்க ரெண்டு பேரும் தானே கூட்டு. இதுக்கு ரோகிணி சொல்றாங்க ஆன்ட்டி உள்ள தான் இருப்பாங்க கூட்டிட்டு வா னு சொல்றாங்க .மனோஜ் வீட்ல இருக்க எல்லாத்தையும் கூப்பிட்டு வராரு. இப்போ ரெண்டு லட்சம் பணத்தை அண்ணாமலை கிட்ட கொண்டு போய் கொடுக்கிறார்.. ரோகிணி சொல்றாங்க அப்பா அனுப்பிவிட்டாங்க  அங்கிள். இப்போ ரெண்டு லட்சம் கொடுக்குறோம் . கொஞ்ச நாள் கழிச்சு 2 லட்சம் கொடுக்குறோம் அப்பா அப்படின்னு மனோஜ்னு சொல்றாரு.

ஆனா முத்து சொல்றாரு எனக்கு வேண்டாம் அப்படின்னு உடனே மனோஜ் வேண்டாமா அப்படின்னு சந்தோசமா கேக்குறாரு.  அண்ணாமலை கேக்குறாரு ஏன் முத்து வேணான்னு சொல்ற.  எனக்கு நாலு லட்சமாதான்  வேணும் அப்படின்னு சொல்றாங்க .இப்ப ரோகிணி சொல்றாங்க அங்கிள் கொஞ்சம் டைம் கொடுக்க சொல்லுங்க நான் கொடுத்துடறேன்.  உடனே மீனா சொல்றாங்க அவங்க தான் சொல்றாங்க இல்ல வாங்கிக்கோங்க அப்படின்னு. உடனே முத்து வாங்கிக்கிறாரு .இப்ப இந்த பணத்தை நீ பத்திரமா லாக்கர் ல பூட்டி சாவியை நீயே வச்சுக்கோ மீனா அப்படின்னு எல்லாரும் முன்னாடியும் சொல்றாங்க. குடுக்குற மாதிரி கொடுத்துட்டு அப்படியே ஆட்டைய போட்டுருவாங்க..

shruthi ,vijaya

நீங்க இந்த பணத்தை வச்சு   கார் வாங்குங்க அத வாடகைக்கு விட்டுரலாம்  அதுல வர வருமானத்தை வைத்து நாம மேலே ரூம் கட்டிடலாம் அப்படின்னு  மீனா சொல்றாங்க.. இப்போ அண்ணாமலை வெளியில படுத்திருக்கிறார் அதை பார்த்து முத்துவும் மீனாவும்   சமாதானப்படுத்துறாங்க உள்ள போய் படுங்கப்பா .நான் போகல நான் இங்கே படுத்துகிறேன்னு   சொல்கிறார். இப்ப விஜயா வெளியில வராங்க படுப்பதற்காக அத பாத்த அண்ணாமலை உள்ள போய் படுத்துகிறார். மீனா சொல்றாங்க அத்தை நீங்களும் உள்ளே போய் படுத்துக்கோங்க.. உடனே விஜயா இதுக்கு தானே நீ ஆசைப்பட்ட பாரு அவரு நான் வந்ததும் அவர் உள்ள போயிட்டாருனு .. சொல்லி திட்டுறாங்க..

காலையில விடிஞ்சதும் ஸ்ருதி மீனாவும் பேசுகிறார்கள்.. குட் மார்னிங் மீனா. மீனா சொல்றாங்க இந்தாங்க காபி எடுத்துக்கோங்க . இப்ப ரோகிணியும் வராங்க இப்ப மூணு பேரும் பேசிட்டு இருக்காங்க.. மீனா சொல்றாங்க அத்தையும் மாமாவும் பேசாம இருக்கிறது கஷ்டமா இருக்குது அவங்களை எப்படியாவது பேச வைக்கணும் .அதுக்கு சுருதி சொல்றாங்க எல்லாமே ரோகினி ஓட ஹஸ்பண்டால வந்ததுதான் அப்படின்னு சொல்லவும் ரோகிணிக்கு கோவம் வந்தது..  சுருதிக்கு ரோகிணிக்கும் வாக்குவாதம் நடக்குது மீனா உடனே சரி விடுங்க.. அத்தை கிட்ட போய் பேசலாம் அப்படின்னு விஜயா ரூமுக்கு கிளம்புறாங்க.. விஜயா  கேக்குறாங்க என்ன மூணு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க.

ரோகிணி சொல்லுறாங்க  ஆன்ட்டி அங்கிள் கிட்ட பேசுங்க . அவர்தான்  என்னை பார்த்தாலே மூஞ்சிய திருப்பிகிறாரே அப்படின்னு சொல்றாங்க. இப்ப மீனாவை திட்ட ஆரம்பிக்கிறாங்க எல்லாம்  இவளாலதான்  .உடனே சுருதி ஸ்ருதி சொல்றாங்க ஆன்ட்டி நீங்க பண்ண தப்புக்கு அவங்க என்ன பண்ணுவாங்க நீங்க தானே மீனாவ கேக்காமலே  நகையை எடுத்தீங்க அது தப்பு தானே.. இதுக்கு ஒரே வழி தான் இருக்கு மீனா கிட்ட நீங்க மன்னிப்பு கேட்டால் அங்கிள் பேசிடுவாரு.. ரோகிணி சொல்லுறாங்க ஆன்ட்டி ஏன் மன்னிப்பு கேட்கணும்.. பாத்தியா  ரோகினி எல்லாரும் இவ காலில் வந்து விழுகணும் . இப்ப மீனா சொல்றாங்க நீங்களும் மாமாவும் பேசாம இருந்தது எனக்கு கஷ்டமா இருந்துச்சு அதான் வந்தோம்.

manoj (3)

ரோகிணி சொல்றாங்க மனோஜ்க்கு ஹெல்ப் பண்ண போய்தான் ஆன்ட்டி மாட்டிகிட்டாங்க. இப்ப  ஸ்ருதிசொல்லுறாங்க   மனோஜ் தப்பு செய்ய விடாமல் ஆன்ட்டி தடுத்து இருக்கலாம் இல்ல அப்போ இதுவும் தப்பு தானே.. ஆன்ட்டி நீங்க மீனா கிட்ட சாரி சொன்னா அங்கிள் பேசுவார் என்று சொல்லிட்டு வாங்க மீனா போலாம் அப்படின்னு மீனாவின் கூட்டிட்டு போறாங்க.  ரோகினி அந்த ஸ்ருதி பொண்ணு எப்படி பேசிட்டு போறா.. எல்லாம் அந்த பூ கட்டுறவ  சொல்லி கொடுத்திருப்பா எல்லாத்தையும் எனக்கு எதிரா திருப்பி விட பாக்குறா.. விடுங்க ஆன்ட்டி அவங்க ஏதோ பேசிட்டு போறாங்க. நீங்க அங்கள்  கிட்ட பேச ட்ரை பண்ணுங்கன்னு சொல்றாங்க ..நான் என்னமா பண்றது அவரு என்னை பார்த்தாலே மூஞ்சிய திருப்பிக்கிறாரு எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல நான் பார்வதி வீடு வரைக்கும் போயிட்டு வரேன்னு சொல்றாங்க.

முத்துவும் , செல்வமும் கார் பாக்குறதுக்காக வந்திருக்கிறார்கள். செல்வம் கேட்கிறாரு  என்னடா திடீர்னு கார்  வாங்குற அப்படின்னு. அதுக்கு முத்து சொல்றாரு அந்த ஓடுகாலி இரண்டு லட்சம் பணம் கொடுத்தான்  மீனாதான் சொன்னா போய் செகண்ட்ல கார் வாங்கி வாடகைக்கு விடலாம்  அதை வைத்து ரூம் கட்டணும்னு சபதம் வேற எடுத்து இருக்கா அதாண்டா அப்படின்னு சொல்றாங்க. சரி வா ஓனர போய் பாக்கலாம்னு போறாங்க அதோட இன்னைக்கு எபிசோட் முடிந்தது. நாளைக்கு ப்ரோமோல  விஜயா பார்வதி கிட்ட பேசிட்டு இருக்காங்க இப்படியே விட்டா அந்த பணக்கார பைத்தியம் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுருவா என் புள்ளையும் அடிமை ஆக்கிருவா இதுக்கு ஒரு முடிவு கட்டணும் அப்படின்னு சொல்றாங்க. நாளைக்கு விஜயா என்ன திட்டம் தீட்டியிருகாங்கனு   பார்க்கலாம்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்