நடிகை ஸ்ருதிக்கு திருமண மோசடி வழக்கில் போலீஸ் காவல்!
நடிகை ஸ்ருதி திருமணம் செய்து கொள்வதாக பொறியாளரை மோசடி செய்த வழக்கில் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த நடிகை ஸ்ருதி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 10க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்டசேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் அளித்த புகாரில் கடந்த 10ம் தேதி ஸ்ருதி, குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நாமக்கல் பரமத்தி வேலூரைச் சேர்ந்த மென்பொறியாளர் சந்தோஷ்குமாரும், ஸ்ருதி தன்னிடம் 43 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக புகார் தெரிவித்தார். இவ்வழக்கிலும் கைது செய்யப்பட்டு ஆஜர்ப்படுத்தப்பட்ட ஸ்ருதியை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோவை மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.