சினிமாவை பொறுத்தவரையில் மற்ற மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் தமிழ் சினிமாவிலும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு. குறிப்பாக ராஷ்மிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில பிரபலங்களும் தெலுங்கு, ஹிந்தியில் சில படங்களில் நடித்து பிரபலமான பிறகு தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்தார்கள். ஆனால், பெரிதாக அவர்களுக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனால் கூட பிறகு அப்படியே தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். அதன் பின் தான் நீண்ட ஆண்டுகளுக்கு பின் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்டரி கொடுத்தார். இந்நிலையில், தற்போது இவர்களைப்போலே மற்றோரு தெலுங்கு நடிகை தமிழ் சினிமாவிற்குள் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.
அந்த நடிகை வேறு யாரும் இல்லை சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி ஹிட்டான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீலீலா தான். இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். குறிப்பாக அவர் படத்தில் இடம்பெற்ற பாடலில் ஆடிய நடனம் தான் அவரை பெரிய அளவில் கொண்டு சேர்த்து என்றே கூறலாம்.
இந்நிலையில், இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஸ்ரீலீலாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். தெலுங்கு, தமிழ் மொழிகளில் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தெரிவித்தும் இருந்தார். இதனை வைத்து பார்க்கையில் அவர் கண்டிப்பாக விரைவில் ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…