தமிழ் சினிமாவில் கால் பதிக்க துடிக்கும் நடிகை ஸ்ரீலீலா?

Sreeleela

சினிமாவை பொறுத்தவரையில் மற்ற மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் தமிழ் சினிமாவிலும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு. குறிப்பாக ராஷ்மிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில பிரபலங்களும்  தெலுங்கு, ஹிந்தியில் சில படங்களில் நடித்து பிரபலமான பிறகு தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்தார்கள். ஆனால், பெரிதாக அவர்களுக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

read more- கலகலப்பு 3-யில் கவின் கேட்ட சம்பளம்? தெறித்தோடிய சுந்தர் சி!

பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனால் கூட பிறகு அப்படியே தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். அதன் பின் தான் நீண்ட ஆண்டுகளுக்கு பின் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்டரி கொடுத்தார். இந்நிலையில், தற்போது இவர்களைப்போலே மற்றோரு தெலுங்கு நடிகை தமிழ் சினிமாவிற்குள் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.

read more- வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!

அந்த நடிகை வேறு யாரும் இல்லை சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி ஹிட்டான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீலீலா தான். இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். குறிப்பாக அவர் படத்தில் இடம்பெற்ற பாடலில் ஆடிய நடனம் தான் அவரை பெரிய அளவில் கொண்டு சேர்த்து என்றே கூறலாம்.

இந்நிலையில், இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஸ்ரீலீலாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். தெலுங்கு, தமிழ் மொழிகளில் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தெரிவித்தும் இருந்தார். இதனை வைத்து பார்க்கையில் அவர் கண்டிப்பாக விரைவில் ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்