நடிகர் ஸ்ரீ காந்த், நடிகை பூமிகா இருவருமே நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 90ஸ் காலகட்டத்தில் எல்லாம் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்த ‘ரோஜா கூட்டம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 75 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது.
இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீ காந்த் , பூமிகா இருவரும் இணைந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்ததாம். ஆனால், சில காரணங்களால் இவர்கள் இருவராலும் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். குறிப்பாக ரோஜாக்கூட்டம் திரைப்படத்தில் நடித்த பிறகு ஸ்ரீகாந்திற்கு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அந்த இரண்டு படங்கள் நடிக்க கமிட்டும் ஆகிவிட்டாராம்.
அந்த நடிகர் கூட நடிச்சே ஆகணும்! நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மிகப்பெரிய ஆசை!
படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டதாம். ஆனால் , பிறகு உடல்நல குறைவு காரணமாக ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம். எனவே, அவரால் நடிக்க கூடிய நிலைமையில் அவர் இல்லாத காரணத்தால் ஓய்வெடுத்து வந்தாராம். நடிக்கும் அளவிற்கு உடல் நிலை இருந்தாலும் படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் இருந்ததாம். எனவே, தன்னால் இந்த படம் தாமதமாக கூடாது என்ற காரணத்தால் படத்தில் இருந்து ஸ்ரீகாந்த் வெளியேறிவிட்டாராம்
அதைப்போல, உடல் நிலை எல்லாம் சரியாகி மற்றோரு படத்தில் நடித்து கொண்டு இருந்தாராம். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூமிகா தான் நடித்து வந்தாராம். படத்தின் படப்பிடிப்பின் போதே அவருக்கும் பூமிகாவுக்கும் சண்டை வந்துவிட்டதாம். பின் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது பாடல் காட்சி ஒன்றில் நடித்துவிட்டு பாதியிலேயே படத்தில் இருந்து ஓடிவிட்டாராம்.
சொல்லாமல் கொள்ளாமல் படத்தில் இருந்து ஓடியதால் ஸ்ரீ காந்த் மிகவும் கடுப்பாகிவிட்டாராம். பின் ஒரு முறை விமான நிலையத்தில் நடிகை பூமிகாவை ஸ்ரீகாந்த் சந்தித்தாராம். அப்போது பூமிகா படப்பிடிப்பு எப்படி நல்ல போச்சா? என்பது போல சிரித்துக்கொண்டே கேட்டாராம். அதற்கு ஸ்ரீகாந்திற்கு கத்தியை எடுத்து கொள்ளும் அளவிற்கு கோபம் வந்தத்தம். பிறகு சிரித்துக்கொண்டு அந்த சம்பவங்களை பற்றி பேசிக்கொண்டார்களாம். இந்த தகவலை நடிகர் ஸ்ரீகாந்த்தே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…