அட இது அதுல…ஸ்ரீதேவியின் 10 வருட பழமையான மாடர்ன் உடையில் மகள் ட்ரெண்டிங்.!

மறைந்த தென்னிந்திய நடிகையான ஸ்ரீதேவி மற்றும் தயரிப்பாளரான போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் தனது முதல் படமான ‘தி ஆர்ச்சீஸ்’ மூலம் படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்க உள்ளார். இதில், குஷி பெட்டி கூப்பராக நடிக்க உள்ளார். ஷாருக்கானின் மகளான சுஹானா கான் வெரோனிகாவாக நடிக்க, அமிதாப் பச்சன் பேத்தியுமான அகஸ்தியா நந்தா ஆர்ச்சியாக நடிக்கிறார்.
மும்பையில் நேற்று (செவ்வாய்) இரவு நடந்த படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில், குஷி கபூர் தனது ஸ்ரீதேவியின் பழைய உடையை மீண்டும் அணிந்து அனைவரையும் திகைக்க வைத்தார். ஜோயா அக்தர் இயக்கிய, ‘The Archies’ (தி ஆர்ச்சீஸ்) நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 7 அன்று ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இது அமெரிக்க காமிக்ஸின் பிரபலமான கற்பனைக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
அதற்கு முன்னதாக, இப்படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், ஷாருக்கான் மற்றும் அவரது முழு குடும்பத்தினர் முதல் பச்சன்-நந்தா குடும்பம் வரை, பல பிரபலங்கள் இந்த சிறப்புத் திரையிடலுக்கு வந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷி கபூர், தனது தாயாரின் ஸ்ரீ தேவியின் பளபளப்பான மாடர்ன் (ஸ்ட்ராப்லெஸ் கவுன்) உடையை அணிந்து வந்தார்.
சும்மா பளபளன்னு மின்னுது முதுகு ! கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் மிருணாளினி!
மேலும், ஸ்ரீதேவிக்கு சொந்தமான வைர நெக்லஸ் மற்றும் காதணிகளுடன் இருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இது 2013 IIFA விருது விழாவில் ஸ்ரீதேவி அணிந்திருந்த அதே உடையை குஷி கபூர் அணிந்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram