பிரபல நடிகருடன் இணையும் ஸ்ரீதேவியின் மகள்!
நடிகை ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளாவார். இவரது தந்தை போனி கபூர் திரைப்பட தயாரிப்பாளர். தற்போது இவர் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து உருவாகவுள்ள புதிய படத்தில், நடிகை ஜான்வி கபூர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். அஜித்தின் படத்தை தொடர்ந்து, அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் நாயகியாக நடிக்க, ஜான்வி கபூரிடம் பூரி ஜகன்னாத் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.