போனி கபூர் குடும்பம் ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவுக்குச் சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் சொத்துக்களைக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாகச் சில முக்கியமான தகவல்களை வெளியிடப்போவதாக ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2 வாரங்கள் ஆன பின்னரும் அதுபற்றிப் பேசாமல் அவர் தொடர்ந்து அமைதி காக்கிறார்.
இதற்குக் காரணம் சென்னையில் ஸ்ரீதேவிக்குச் சொந்தமான பங்களா உள்ளிட்ட சொத்துக்களை ஸ்ரீலதாவுக்குக் கொடுப்பதாகக் கபூர் குடும்பம் உறுதி அளித்திருப்பதாகவும், அதனால் எதுவும் பேசாமல் அமைதி காக்க வேண்டும் என ஸ்ரீலதாவுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீதேவி சென்னையில் வாங்கிய சொத்துக்களை அவர் பெற்றோரின் பெயரில் பதிந்திருந்ததாகவும், இதனால் ஸ்ரீதேவிக்கும் ஸ்ரீலதாவுக்கும் இடையே ஏற்கெனவே சொத்துத் தகராறு இருந்ததாகவும், இந்நிலையில் அந்தச் சொத்துக்களை ஸ்ரீலதாவுக்கே விட்டுவிடலாம் என போனி கபூர் முடிவுசெய்துள்ளதாகவும் போனி கபூருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…