லாரன்ஸை வீட்டில் சந்தித்த ஸ்ரீ ரெட்டி …!அட்வான்ஸுடன் வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்…!பெருமூச்சு விட்ட ஸ்ரீ ரெட்டி
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனக்கு பட வாய்ப்பு அளித்ததாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் அதே குற்றச்சாட்டை முன் வைத்தார்.
குறிப்பாக ராகவா லாரன்ஸ், இயக்குனர் முருகதாஸ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார்.எனக்கு ஸ்ரீ ரெட்டி விஷயம் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் அவர் கூறியது குறித்து பலர் என்னிடம் கேட்டனர்.இதனால் தற்போது இந்த கேள்விக்கு பதில் கூற நான் தயார்.மேலும் ஸ்ரீ ரெட்டியின் திறைமைகளை நிருபித்தால் நான் உங்களுக்கு கண்டிப்பாக பட வாய்ப்பு வழங்குகிறேன் என்று தெரிவித்தார்.மேலும் ஸ்ரீ ரெட்டிக்கு பயந்து இந்த அறிக்கை வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார்.
பின்னர் நடிகை ஸ்ரீ ரெட்டி இந்த சவாலை ஏற்றார்:
பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் ,நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கூறிய சவாலை ஏற்றுக்கொள்கிறேன்.அனைவரும் என்னை ஆசிர்வதியுங்கள் என்றும் கூறினார்.
தற்போது நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸை அவரது இல்லத்தில் சந்தித்து நடித்துக் காட்டியதாகவும், அது அவருக்கும் பிடித்துவிட்டதால் அடுத்தப் படத்தில் வாய்ப்பு வழங்குவதாக உறுதி செய்திருக்கிறார்.அதேபோல் அந்தப் படத்தில் நடிப்பதற்கான முன் பணத்தை பெற்று விட்டேன் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.