இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம் , ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படம் தரமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த நிலையில், படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் துல்லியமான பின்னணி இசையுடன் ஒரு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது என தெரிகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…