டாடா திரைப்பட வெற்றியை தொடர்ந்து, ‘ஸ்டார்’ என்ற புதிய படத்தில் ஹரிஷ் கல்யாணுக்குப் பதிலாக நடிகர் கவின் நடிக்கிறார் என்று முன்பு கூறப்பட்டது. தற்போது, அது உறுதியாகி இருக்கிறது, தயாரிப்பாளர்கள் யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் சிறப்பு ப்ரோமோவை வெளியிட்டனர்.
பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ப்ரோமோவில், ஒரு கலைஞரின் டிரஸ்ஸிங் டேபிளைக் காட்டி தொடங்குகிறது. மேலும், அதில் ஸ்பாட்லைட்கள், கேமரா மற்றும் ஸ்கிரிப்ட் பேப்பர்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ப்ரோமோ கவின் கதாநாயகனாக நடிக்கும் அறிமுகத்தை காட்டுகிறது.
குறிப்பாக அதில் “நூறாயிரம் பாதங்கள் என்னை மிதித்து நின்றாலும், ஓராயிரம் யானை பலம் கொண்டு உதறி எழுந்து நிற்பேனே” என்ற வசனங்களில், கவினின் பின்னணி குரலில் உருவாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கதைக்களத்தைப் பற்றி எலன் பேசுகையில், ஸ்டார் படம் ஒரு கல்லூரிக் கதை, காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்தையும் கலந்ததாக இருக்கும். மும்பை மற்றும் சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்டது. டாடா படத்தில் பணிபுரிந்த எழில்அரசு ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பைக் கையாளுகிறார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…