ஒவ்வொரு ஆண்டும் திருமணமான தம்பதிகள் தீபாவளியை பண்டிகையை , தல தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், திரைபிரபலங்களும் தல தல தீபாவளியை கொண்டாடுவது உண்டு. இந்நிலையில், இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடும் தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்த செலிபிரிட்டிகள் யார் பார்க்கலாம் வாங்க.
சூப்பர் ஜோடிகளான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு 28 நவம்பர் அன்று திருமணம் செய்து கொண்டனர். இருவரும் 2019 ஆம் ஆண்டு வெளியான தேவராட்டம் படத்தின் படப்பிடிப்பின் போது, மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இறுதியில், இருவர் வீட்டாரின் சம்மதத்துடன் நண்பர்கள் மற்றும் திரைபிரபலங்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை ஹன்சிகா மோத்வானியும் நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கதுரியாவும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வந்தனர். அவர்கள் 2019 முதல் கூட்டாக இணைந்து ஒரு தொழிலை நடத்தி வருகின்றனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், நவம்பர் 2 ஆம் தேதி, ஹன்சிகா மோத்வானி தனது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர், இருவரும் டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் தொழிலதிபர் நர்மதா உதய்குமாரை கடந்து ஆண்டு அக்டோபர் 28ம் தேதி சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்து முறைப்படி, நண்பர்களும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது. இவர்களது திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக சிலம்பரசன் சிம்பு கலந்து கொண்டார்.
அனுஷ்க்காவை ரெம்ப பிடிக்கும்.. பதட்டமாயிட்டேன்.! அந்த கதையை உளறிய டாப் இயக்குனர்?
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் அசோக் செல்வன் பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் இளைய மகளான கீர்த்தி பாண்டியனை செப்டம்பர் 13 இன்று திருநெல்வேலியில் இருவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘புளூ ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.
நம்ப வச்சி ஏமாத்திய ராம் சரண்..! கேம் சேஞ்சர் படத்தின் சோக அப்டேட்.!
கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் நகரில் உள்ள சூர்யகார் என்ற ஹோட்டலில் பெற்றோர்கள் முன்னிலையில், இவர்களுடைய திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய சினிமா பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா மற்றும் ராகவ் சதா ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இடையே, தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் உதய்பூரில் உள்ள தாஜ் ஏரி அரண்மனையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…