தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!
நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும், நாசர், விஷால், கார்த்தி ஆகியோரின் பதவிக்காலம் கடந்த அக்டொபர் மாதமே நிறைவடைந்த நிலையில், நடிகர் சங்க வேலைகள் நிறைவு பெறாததால், 6 மாத காலம் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இதனையடுத்து நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், ஜூன் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்பு மனுக்கள் ஜூன் 11-ம் தேதி பரிசீலிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல், ஜூன்-14-ம் தேதி மாலை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜூன் 23-ம் தேதி, சென்னை சத்யா ஸ்டுடியோவில் வைத்து, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அலுவலரான ஒய்வு பெற்ற நீதிபதி, பதமநாபன் தெரிவித்துள்ளார்.