நடிகர் சங்கத் தேர்தல் பாண்டவர் அணி பட்டியல் வெளியீடு!
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தேர்தலானது வரும் ஜூன் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் கடந்த முறை போலவே விஷால் தலைமையிலான பஞ்ச பாண்டவர் அணி இந்த முறையும் போட்டியிடுகிறது.இந்நிலையில் அந்த அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் அவர்களும், துணை தலைவர் பதவிக்கு நடிகர்கள் பூச்சிமுருகன் மமற்றும் கருணாஸ் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.அதே போல், பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால் அவர்களும்,பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தி அவர்களும் போட்டியிடுகிறார்கள்.