நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.இதற்கிடையில், படத்திற்கான மூன்றாவது பாடலான SoulOfVarisu என்ற அம்மா செண்டிமெண்ட் கொண்ட பாடல் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது, அதன்படி தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலை சின்ன குயில் சித்ரா தேவி பாடியுள்ளார். பாடலை எழுத்தாளர் விவேக் எழுதியுள்ளார். பாடலை கேட்கையில் மிகவும் எமோஷனலாக இருக்கிறது. எனவே எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த பாடல் ஒன்றிப்போகும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு ஒரு சூப்பரான பாடல் வாரிசு படத்திலிருந்து வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வாரிசு படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அடுத்த பாடலும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் வாரிசு திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…