சூரி – வினோத்ராஜ் ‘கை கூப்பி வணங்க வேண்டிய கலைஞர்கள்’ – இயக்குனர் பாலா வாழ்த்து.!

சென்னை : நடிகர் சூரியின் ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஆகஸ்ட் 23ஆம் தேதி) வெளியாகி விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பல பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில், இயக்குனர் பாலாவும் பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். முன்னதாக, ‘வாழை’ படத்தை பார்த்த பின் மாரி செல்வராஜை, இயக்குநர் பாலா கட்டிப்பிடித்து வாழ்த்தினார். வாழை படத்தின் Pre Release காட்சிகள் பார்த்த இயக்குநர் பாலா கண்கலங்கினார். படம் சிறப்பாக இருப்பதாக, இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவுக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
அவரது கடிதத்தில், ” நம்முடைய தமிழ் திரைப்படத்துறையில் இருந்து, உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று, இந்தக் கொட்டுக்காளி. ஆழமான இக்கதையை எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் வினோத்ராஜ்.
குறிப்பாக, சூரி தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழ்ச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில் மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி அன்னா பென். படத்தில் நடித்திருக்கும் அனைவருமே. தாங்களும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம்தான் என்று சவால்விட்டிருக்கிறார்கள்
காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல் மிகவும் போற்றுதலுக்குரியவர். சிவகார்த்திகேயனுக்கு வினோத்ராஜ் சார்பாக எனது நன்றிகள் தெரிவித்தோடு, சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள். கொட்டுக்காளி படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள் ” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!
March 26, 2025
RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!
March 26, 2025
விடைபெற்றார் மனோஜ்… தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்..!
March 26, 2025