இயக்குனர் பொன்ராம் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதலில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து பொன்ராம் -சிவகார்த்திகேயன் கூட்டணி “ரஜினிமுருகன்” திரைப்படத்தில் இணைந்தனர்.
இந்த திரைப்படமும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். மேலும் படத்தின் இறுதிக்காட்சியில் போஸ் பாண்டி கதாபாத்திரமும், ரஜினிமுருகன் கதாபாத்திரமும் அண்ணன் தம்பி என கட்டப்பட்டிருக்கும்.
இதையும் படியுங்களேன்- தமிழ் சினிமாவால் மறக்க முடியாத மாஸ் கம்பேக்.! சிம்புவின் “மாநாடு” மட்டும் ஏன் இவ்வளவு ஸ்பெஷல்.?
இதனால் பலரும் ரஜினி முருகன் 2 உருவாகுமா என ஆவலுடன் காத்திருந்த நிலையில். அதற்கான சூப்பர் அப்டேட்டை இயக்குனர் பொன்ராம் கொடுத்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பொன்ராம் ” ரஜினிமுருகன் படத்தின் கடைசி காட்சியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் போஸ் பாண்டி கதாபாத்திரம் இடம்பெறுவது போல் காட்டி இருப்பேன்.
எனவே, ரஜினிமுருகன் 2 பாகத்திற்கான வேலைகள் தான் தற்போது விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் 2 சிவகார்த்திகேயன், 2 சூரி,நடிகைகள் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண் இந்த கம்போவை மையமாக வைத்து நான் கதை தயார் செய்து வருகிறேன். இதைப்பற்றி சிவகார்த்திகேயன் சாரிடமும் கூறியுள்ளேன். அவரும் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அவருடைய நேரமும் என்னுடைய நேரமும் சரியாக வரும்போது இந்த படத்தை பண்ணுவோம்” என கூறியுள்ளார் இயக்குனர் பொன்ராம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…