நடிகர் சிம்பு தற்போது “பத்து தல” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான டீசர் கூட நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வருகின்ற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து பத்து தல படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகின்ற மார்ச் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக இருப்பது வேண்டும் என்பதற்காக பல பிரபலங்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் மிக முக்கியமான ஒரு பிரபலம் என்றால் சூர்யா தான். அட ஆமாங்க பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்து கொள்ள உள்ளாராம். ஏனெனில், சூர்யாவின் வரவிருக்கும் திரைப்படமான “சூர்யா 42” படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது.
அதே நிறுவனம் தான் பத்து தல படத்தையும், தயாரிக்கிறது. அதையும் தாண்டி சூர்யாவும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள் எனவே நட்பு ரீதியாக இருக்க வேண்டும் என்பதற்காக சூர்யாவை அவர் அழைத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. எனவே சூர்யா வருவதே கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுதி என சினிமாவட்டத்தில் சொல்கிறார்கள்.
மேலும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42- வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…