இரண்டாவது திருமணம் எப்போ..? மனம் திறந்த சோனியா அகர்வால்.!
நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டடேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் செல்வராகவன் – சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் கடந்த 2006-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். இவர்களது திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது எனவே கூறலாம். இதனையடுத்து, நடிகை சோனியா அகர்வால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அடிக்கடி இணையத்தில் தகவல் பரவுவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில், சமீபத்தில் கூட சோனியா அகர்வால் விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் மறுமணம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய சோனியா அகர்வால் ” நிறைய பேர் எனக்கு கால் செய்து நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா..? என்று கேட்டார்கள்.
நான் அதற்கு இல்லை என்று கூறினேன். நான் இன்னும் எத்தனை நாட்கள் தனியாகவே இருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.எனக்கு ஏற்றது போல என்னை புரிந்துகொள்ளும் நல்ல நபரை நான் சந்திக்கும்போது எனக்கு திருமணம் நடக்கலாம்” என்று கூறியுள்ளார்.