அஜித்திற்கு தம்பியாக களமிறங்கும் பிரபல நடிகரின் மகன்!
நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, இயக்குனர் எச்.வினோத் இயக்ககத்தில், தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னையில் விறுவோறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெறவுள்ளது. மேலும், இப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடிகர் ராஜ் அய்யப்பா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.