daniel balaji [FILE IMAGE]
Daniel Balaji : மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி பற்றி பலருக்கும் தெரியாத விஷயம்
பொல்லாதவன், வேட்டையாடு விளையாடி, பைரவா, பிகில், வடசென்னை போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. 48 வயதான இவர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார்.
இந்நிலையில், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான நல்ல மனிதர். சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தங்களுடைய பணங்களை வேறு வழியில் செலவழித்து வரும் சூழலில் டேனியல் பாலாஜி உயிரோடு இருந்த சமயத்தில் சென்னையை அடுத்த ஆவடி அருகில் அங்காள பரமேஸ்வரி கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.
டேனியல் பாலஜியின் தாயார் டேனியல் பாலாஜி சிறிய வயதாக இருந்த சமயத்தில் இருந்தே வரை ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுவருவது வழக்கமாம். பின் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அந்த கோவிலுக்கு செல்லும்போது கோவில் சரியான பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து போனதாம்.
இதனை பார்த்துவிட்டு எப்படியாவது ஒரு கோவில் கட்டவேண்டும் என்று டேனியல் பாலாஜியிடம் அவருடைய தாயார் வேண்டுகோள் வைத்தார். உடனடியாக தனது தாயின் ஆசைக்காக டேனியல் பாலாஜி சென்னையை அடுத்த ஆவடி அருகில் அங்காள பரமேஸ்வரி கோயில் கட்டினார். இந்த கோவில் கட்டிக்கொண்டு இருந்த சமயத்தில் தான் யாஷ் நடிக்கும் படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க டேனியல் பாலாஜிக்கு வாய்ப்பு வந்ததாம்.
ஆனால், தனது தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இப்போது இது மட்டும் தான் முக்கியம் கோவில் கட்டும் வேலைகளை பார்ப்போம் என யாஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்பையே டேனியல் பாலாஜி மறுத்துவிட்டாராம். டேனியல் பாலாஜி ஆசையாக கட்டிய அந்த கோவிலில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
டேனியல் பாலாஜி கோவில் கட்டியது பற்றி நடிகர் விஜய்யே பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பாராட்டி பேசி இருந்தார். விழாவில் பேசிய அவர் ” டேனியல் பாலாஜி பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் இருக்கிறது. படத்தில் தான் கத்தி நிஜத்தில் அவர் ரொம்பவே பக்தி. அவர் சாவடி அடிக்கும் வில்லனாக தான் எல்லாருக்கும் தெரியும் ஆனால், அவர் ஆவடியில் அம்மன் கோவில் கட்டியுள்ளார்” என பாராட்டி பேசி இருந்தார். இப்படியான நல்ல மனிதர் டேனியல் பாலாஜி திடீரென மறைந்துள்ளது திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…