நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர் அடுத்ததாக நடிகர் விஸ்ணு விஷாலுக்கு ஜோடியாக “கட்டா குஸ்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் விஸ்ணு விஷலை விட ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பை பாராட்டி வருகிறார்கள். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- ஐயோ..கீர்த்தி ஷெட்டிக்கு வந்த சோதனை.! சோகத்தில் ரசிகர்கள்….
இந்த திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. கடந்த சில மாதங்களாகவே நல்ல நகைச்சுவைப் படங்கள் அதிகம் வரவில்லை. எனக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் சாதாரணமாக ஏற்று நடித்து விடுவேன். ஆனால் நகைச்சுவையாக கதாபாத்திரத்தில் மட்டும் நடிப்பது ரொம்பவே கஷ்டம்.
இந்த “கட்டா குஸ்தி ” திரைப்படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்திருக்கிறேன். இதில் நடிப்பது கொஞ்சம் சவாலாக தான் இருந்தது. இதற்கு முன்பே நான் ஒருவரை அடித்த சம்பவம் நடந்துள்ளது. ஏனென்றால், என்னை அந்த நபர் தவறாகத் தொட்டார். அதனால் எனக்கு மிகவும் கோபம் வந்து அடித்து விட்டேன். சமீப காலமாக அப்படி யாரையும் அடித்த அனுபவம் இல்லை” என்று கூறியுள்ளார். மேலும் இவரது நடிப்பில் அடுத்த ஆண்டு பொன்னியின் செல்வன் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…