நான் ‘அம்மாவாக ஆசை படுகிறேன்’! பொன்னியின் செல்வன் நடிகை ஓபன் டாக்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சோபிதா துலிபாலா. இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக சில ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் பொன்னியின் செல்வன் என்றே கூறலாம். இந்த படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
அந்த கதாபாத்திரத்திற்கு அவர் நன்றாக செட் ஆகி இருந்த காரணத்தால் இளைஞர்களும் தமிழ் மக்களுக்கும் அவரை மிகவும் பிடித்தது என்றே சொல்லலாம். தற்போது அவர் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் படங்களில் மட்டுமே நடித்து கொண்டு வருகிறார்.இதற்கிடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சோபிதா துலிபாலா தனக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக மனம் திறந்து பேசியுள்ளார்.
read more- உறவு தொடரல…’அதான் வாய்ப்பு கொடுக்கல’…மணிரத்னம் பற்றி மது!!
இது குறித்து பேசியா அவர் ” வாழ்க்கைக்கு என்று ஒரு இலக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி என்றுமே நினைக்கவே மாட்டேன். வாழ்கை என்பது ஒரு கடற்கரையிலிருந்து மற்றொரு கடற்கரைக்கு செல்ல வேண்டும்.நாம் எதைச் செய்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். எனக்கு பெரிய இலக்குகள் இல்லை. அதனால் எதையோ இழந்ததைப் போல என்னால் உணர முடியாது.
read more- என்னால அப்படியும் நடிக்க முடியும்! ‘பில்லா’ குறித்து மனம் திறந்த நயன்தாரா!
ஒரு சில சமயங்களில் மட்டுமே எதோ என்னிடம் இல்லாதது போல உணர்வேன். நான் என்னுடைய வாழ்க்கையில் விரும்புவது தாய்மையை மட்டும் தான். ஆனால் நான் உண்மையில் அதை அனுபவிக்கும் போது. அதாவது நான் தாயாகி என்னை அம்மா என்று குழந்தை அழைக்கும் போது அது எப்படி இருக்கும் என்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.
read more- இனிமே அவர் சொன்னா தான் நடிப்பேன்! சூர்யா போட்ட முக்கிய கண்டிஷன்?
அம்மா என்று அழைப்பது எவ்வளவு நன்றாக இருக்குமோ.. அதுக்காக காத்திருக்கிறேன்’ அதனை நினைத்து பார்க்கும் போதே எனக்குள் எதோ உற்சாகம் எனவே ஒரு தாயாக ஆசைப்படுகிறேன்” எனவும் சோபிதா துலிபாலா பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், சோபிதா துலிபாலா தற்போது சிதாரா என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.