பொன்னியின் செல்வன் 2 படத்தில் மொத்தம் இத்தனை பாடல்களா..?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
எனவே, முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக பொன்னியின் செல்வன் பட குழு ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக எடிட் செய்து வருகிறார்கள். படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளது என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, படத்தில் மொத்தமாகவே 3 பாடல்கள் தான் உள்ளதாம். 3 பாடலும் மிகவும் அருமையாக வந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும், இந்த மூன்று பாடலையும் படக்குழு ட்ரைலருடன் வெளியீட திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி, பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா டிரெய்லர் வெளியீட்டு விழா ஏப்ரல் 4- ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.