என் வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள், கண்ணீர்… நடிகை சமந்தா உருக்கம்.!
நடிகை சமந்தா தற்போது ‘சகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடிந்துள்ளார். இந்த படம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14 அன்று இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழுவினருடன் நடிகை சமந்தாவும் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அந்த வகையில், நடிகை சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு “வேதனையில் இருந்து நான் இன்னும் முழுமையாக மீளவில்லை” என வருத்தத்துடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பார்க்கும்போது நீங்கள் என்னை சுதந்திரமான எண்ணங்கள் கொண்ட வலுவான பெண்ணாக நினைத்துக் கொள்ளலாம்.
நான் என்னை அப்படி நினைக்கவில்லை. நானும் வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள், கண்ணீர், வேதனைகளை பார்த்துள்ளேன். அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் முழுமையாக மீளவில்லை. இன்னும் பல வேதனைகள் என் மனதில் இருந்துகொண்டே தான் இருக்கிறது” என கூறியுள்ளார்.
மேலும் சாகுந்தலம் படத்திற்குப் பிறகு, நடிகை சமந்தா விஜய் தேவர கொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’ என்ற காதல் திரைப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.