snehan Paruthiveeran [file image]
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத படங்களின் பட்டியலில் அமீரின் பருத்திவீரன் படம் கண்டிப்பாக இருக்கும் என்றே சொல்லலாம். கார்த்தி, பிரியா மணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி, சம்பத் ராஜ், சுஜாதா சிவகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில், அமீர் – ஞானவேல் ராஜா விவகாரம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பலரும் அறிக்கையை வெளியீட்டினர்.
அதன் பிறகு இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் வருத்தம் தெரிவித்து இருந்தார். 18 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு படத்தை வைத்து விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருவதால், பருத்திவீரன் படம் பற்றி தெரியாத தகவலும் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த படத்தில் சினேகன் மிகவும் நல்ல பாடல்களை எழுதி கொடுத்து இருப்பார்.
பரபரப்பு செய்தியான பருத்திவீரன்.! முற்றுப்புள்ளி வைக்க சொன்ன சிவகுமார்.!
ஆனால், இந்த படத்தில் பாடல்களை எழுதியதற்கு சினேகன் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லையாம். இந்த தகவலை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பருத்திவீரன் படம் வெளியான சமயத்தில் பெரிய போராட்டமே நடந்தது. இந்த விஷயத்தை சொல்லலாமா என்று கூட எனக்கு தெரியவில்லை இந்த படத்திற்காக நான் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை.
படத்திற்காக நிறைய நண்பர்கள் அவர்களால் முடிந்த உதவியை செய்தார்கள். எனவே நான் சம்பளம் வாங்கவில்லை. ஒரு பாடலுக்கு 10 ஆயிரம் என்றாலும் அந்த படத்திற்கு எனக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் அந்த சமயமே சம்பளமாக கிடைத்திருக்கலாம். ஆனால், அந்த பணம் படத்தை ரிலீஸ் செய்ய உதவும் என்பதனால் நான் வாங்கவில்லை. படத்தையும் தாண்டி அமீர் என்னுடைய நண்பர், சகோதரர் என எல்லாம். பணம் கொடுத்து உதவும் நிலைமையில் நான் இல்லை எனவே, பணத்தை கேட்டு சிரமை படுத்தவேண்டாம் என்று நான் சம்பளமே வாங்கவில்லை” என சினேகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்,…
ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும்…
சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் 'டிராகன்' வெளியானதிலிருந்து,…
சென்னை : ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவானது கோவை ஈஷா யோகா மையம் சார்பாக வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை…
துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ்…