பருத்திவீரன் படம் எடுக்கப்பட்டு வந்த சமயத்தில் படத்தின் இயக்குனர் அமீர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியயோருக்கு இடையே மன கசப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இருந்து இப்போது வரை இருவரும் பேசிக்கொள்ளாமலே இருக்கிறார்கள். பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் கடுமையாக தாக்கி ஞானவேல் ராஜா சமீபத்தில் பேசியது பெரும் பரப்பரப்பையே ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக பிரபலங்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அப்படி ஞானவேல் ராஜா என்ன பேசினார் என்றால் பருத்திவீரன் திரைப்படம் மொத்தமாக 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய ஒரு திரைப்படம். ஆனால் அமீர் சொன்னதை விட படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது.
அந்த 2 நடிகர்களுடன் நடிச்சே ஆகணும்! நடிகை ராஷ்மிகா மந்தனா ஆசை!
பருத்திவீரன் தான் என்னுடைய முதல் படம் எனவே, கணக்கு விஷயத்தில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார்.பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” என்பது போல விமர்சித்து பேசியிருந்தார். இவர் இப்படி பேசியவுடன் அமீர் ” ஞானவேல் சொல்வது கொஞ்சம் கூட உண்மை இல்லை என்னுடைய பெயரை கெடுக்கவே இப்படி செய்கிறார்” என அறிக்கையை வெளியீட்டி இருந்தார்.
அதன்பிறகு சசிகுமார் அமீருக்கு ஆதரவாக இறங்கி “அண்ணன் அமீர் இயக்குனர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்பொழுது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குனர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம்” என்று கூறியிருந்தார்.
சசிகுமாருக்கு பிறகு சமுத்திரகனி, பொன்வண்ணன் உள்ளிட்ட பிரபலங்களும் அமீருக்கு ஆதரவாக பேசினார்கள். அவர்களை தொடர்ந்து பருத்திவீரன் படத்தில் பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் என ஞானவேல் ராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்” என அமீருக்கு ஆதரவாக சினேகன் பேசியுள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…