முன்னணி நடிகையாக இருந்த சினேகா தற்போது தொழிலதிபராக மாறியுள்ளார்.
ரசிகர்களால் அன்புடன் “புன்னகை அரசி” என அழைக்கப்படும் சினேகா பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றே கூறலாம். ஏதேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை சினேகா தொழிலதிபராக மாறியுள்ளார். ஆம், சென்னை தி நகரில், ‘சினேகாலயா சில்க்ஸ்’ என்ற புதிய பட்டுப்புடவை கடையை வரும் 12ஆம் தேதி திறக்க உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், “எனது அன்பான ரசிகர்களுக்கு, எனது தொழில் மற்றும் வாழ்க்கை முழுவதும் நீங்கள் சிறந்த ஆதரவு அமைப்பாக இருந்தீர்கள். இத்தனை வருடங்களாக நீங்கள் என் மீது பொழிந்த அன்புக்காக, உங்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
5 மாத கர்ப்பம்…விரைவில் அம்மாவாகும் நடிகை யாமி கெளதம்.!
எவருக்கும் அவர்களின் கனவுகள் நனவாகும் என்பது வாழ்வில் சிறந்த விஷயம். நான் இப்போது ஒரு அற்புதமான மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறேன். நான் சொந்தமாக”சினேகாலயா சில்க்ஸ்” என்ற பட்டுப் புடவைக் கடையைத் தொடங்குகிறேன், எப்போதும் போல உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…