முன்னணி நடிகருடன் கூட்டணி சேர்ந்த சிறுத்த சிவா மாஸ் அப்டேட்
இயக்குநர் சிறுத்த சிவா இயக்கத்தில் பொங்கல் விருந்தாக வெளி வந்த திரைப்படம் “விஸ்வாசம் “. இந்த படத்தில் தல அஜித் நாயகனாகவும்,லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
இவர் விஸ் வாசத்திற்கு பிறகு எந்த நடிகருடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் இவர் தற்போது சூர்யாவுடன் கூட்டணி சேர்வார் என்ற தக்வல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
மேலும் இன்று மாலை சூர்யாவின் 39 வது படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் அறிவிக்க இருக்கிறது. இந்நிலையில் முதல் முறையாக சூர்யா இமான் மற்றும் சிறுத்த சிவா கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.