நாளை வெள்ளித்திரையில் களமிறங்க போகும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்.!

Tamil Movie Release

Tamil Movie Release: ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தென்னிந்திய சினிமாவின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதிலும் தமிழ் சினிமாவில் போட்டி போடு திரைப்படங்களை களமிறக்குவர். அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை அதாவது நாளை மார்ச் 1-ம் தேதி சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ஒன்றாக திரையரங்குகளில் மோதுகிறது.

இந்த மாதம் அந்த அளவுக்கு திரைப்படங்கள் வெளியாகததால், மார்ச் மாதத்தில் பல திரைப்படங்கள் வரிசையாக வெளியாக இருக்கிறது. அதன்படி, நாளை வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். நாளை போர், சத்தமின்றி முத்தம் தா, அதோ முகம் மற்றும் ஜோஷ்வா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகிறது.

ஜோஷ்வா: இமைபோல் காக்க

கௌதம் வாசுதேவ் மேனனின் ‘ஜோஷ்வா: இமைபோல் காக்க‘ திரைப்படத்தில் நடிகர்கள் வருண் மற்றும் ராஹேய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் சிக்கிய பின், இந்த படம் ஒருவழியாக நாளை (மார்ச் 1 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்‌ஷன் திரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தை 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலுக்காக ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.

READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

போர்

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் இளம் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ள “போர்” திரைப்படம் இந்தி-தமிழ் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டள்ளது. ஹிந்தியில் “டாங்கே” என்றும் தமிழில் “போர்” என்றும் பெயரிடப்பட்ட இப்படம் நாளை (மார்ச் 1 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

கல்லுரியை மையமாக வைத்து ஆக்சன் திரைப்படமாக 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை பிரபு ஆண்டனி மற்றும் மது அலெக்சாண்டருடன் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்த படத்தில், அர்ஜுன் தாஸின் காதலியாக TJ பானு நடிக்க, ​​காளிதாஸ் ஜெயராமின் காதலியாக சஞ்சனா நடிக்கின்றனர்.

READ MORE – சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!

சத்தமின்றி முத்தம் தா

இயக்குனர் ராஜ்தேவ் எழுதி இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “சத்தமின்றி முத்தம் தா” திரைப்படம் நாளை (மார்ச் 1ஆம் தேதி) வெளியாகிறது. மேலும் பிரியங்கா திம்மேஷ், நிஹாரிகா மற்றும் வியான் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செலிபிரேட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை 4 ரூபாய் பட்ஜெட்டில் செலிபிரேட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

READ MORE – கர்ப்பமானதை அறிவித்த தீபிகா படுகோன்.! குழந்தை எப்போ தெரியுமா?

அதோமுகம்

அறிமுக இயக்குனர் சுனில் தேவ் எழுதி இயக்கிய ‘அதோமுகம்‘ என்ற படத்தில் மூலம் சித்தார்த் மற்றும் சைதன்யா ஆகிய இருவரும் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இந்த படத்தில்,  சரித்திரன், ஜே.எஸ்.கவி, அனந்த் நாக், பர்வேஸ் முஷாரஃப், அக்ஷதா அஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அதோமுகம் படத்தில், பின்னணி நடிகர் அருண் பாண்டியன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தை ரீல் பெட்டி நிறுவனம் மற்றும் தரிகோ ஃபிலிம் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்