ஸ்கெட்ச் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க உள்ள விஜய் சேதுபதி – ராஷி கண்ணா! இசையமைப்பாளர் யாரு?!!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், மாமனிதன், தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய படங்கள் ரிலீஸிற்கு ரெடி ஆகி கொண்டிருக்கின்றன.
தற்போது இந்த படங்களை அடுத்து அவர் நடிக்க போகும் புதிய பட செய்தி வெளியாகி உள்ளது. இந்த புதிய படத்தினை ‘ஸ்கெட்ச்’ படத்தினை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்க உள்ளார். ஹீரோயினாக ‘அடங்கமறு’ ஹீரோயின் ராஷிகண்ணா நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு ‘ஒரசாத’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விவேக்- மெர்லின் ஆகியோர் இசையமைக்க.உள்ளனர். மேலும் மற்ற டெக்னீசியன்கள் விவரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU