அஜித்துடன் அதை மறக்கவே முடியாது…புகழ்ந்த சிம்ரன்! சிக்னல் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!
சமீப காலமாக பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது திரையரங்குகளில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது அஜித்தின் வாலி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் 1999 இல் வெளியானது.
READ MORE – வெளியானது ‘STR 48’ ப்ரோமோ வீடியோ? ரசிகர்களை ஏமாற்றிய சிம்பு!
இப்படம் வெளியாகி 24 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இரு வேடங்களிலும் அற்புதமாக நடித்துள்ள அஜித்தின் இந்த திரைப்படம் அப்போவே பெரிய ஹிட் கொடுத்தது.
READ MORE – நீருக்கடியில் முத்தக்காட்சி…15 நாள் வேதனை- தன்வி நேகி!
இந்நிலையில், ரசிகர் ஒருவர் அஜித் மற்றும் சிம்ரனின் நடிப்புத் திறனைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த ரசிகரின் பதிவை ரீ ட்வீட் செய்து, “OMG இந்த காட்சி எனக்காக செய்த விதத்தை என்னால் மறக்கவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
READ MORE – சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? 72 வயது அழகனுக்கு ஜோடியாக புதியப்படம்…
இதனை தொடர்ந்து, சிம்ரனுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, “நான் என் வேலையைச் செய்தேன், ஆனால் சிம்ரன் ஜியும், அஜீத்தும் அதை எடுத்துச் சென்ற விதம், மக்கள் இன்னும் ஒரு புதிய படத்தைப் போல் கொண்டாடுகிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
???????? i did my job , but @SimranbaggaOffc ji the way U and Ajith Sir carried it like anything people r still celebrating like a new movie https://t.co/EHKo0gDDCi
— S J Suryah (@iam_SJSuryah) February 27, 2024