ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிக்க மறுத்த எஸ்.ஜே.சூர்யா! காரணம் என்ன தெரியுமா?

Jigarthanda Double X sj suryah

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியரை வைத்து “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா இந்த திரைப்படத்தில் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்தது. அந்த அளவிற்கு இதுவரை இல்லாத வகையில் அவருடைய கெட்டப் சற்று வித்தியாசமானதாக இருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவே ஒப்புக்கொள்ளவில்லையாம்.

ஏனென்றால், இந்த திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஸ்கோப் இல்லை என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியதாம். இதன் காரணமாக தான் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறினாராம். ஏற்கனவே, அவர் கார்த்திக் இயக்கத்தில் இறைவி திரைப்படத்தில் நடித்திருந்தார். எனவே, இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்த காரணத்தால் மனம் விட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தார்களாம்.

அப்போது, கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும். உங்களை போல ஒரு நடிகர் இந்த திரைப்படத்தில் நடித்தால் தான் கண்டிப்பாக இந்த கதாபாத்திரம் நன்றாக இருக்கும் எனவும், இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு நல்ல நடிகர் தான் வேண்டும் என்று கார்த்திக்  சொன்னதால் தான் எஸ்.ஜே.சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

அது மட்டுமின்றி, “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரான சத்யஜித் ரேயின் உதவி இயக்குநராக நடிக்கிறார். எனவே, அதனால்தான், அவரது கெட்டப் மற்றும் ஸ்டைல் அப்படியே படத்தில் இருக்கிறாராம். இந்த தகவலை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்