shankar about sjs [File Image]
கேம்சேஞ்சர் : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே சமயத்தில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும், ராம்சரணை வைத்து கேம்சேஞ்சர் படத்தையும் இயக்கி வந்த நிலையில், இந்தியன் 2படம் முழுவதுமாக முடிந்து வருகின்ற ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் கேம்சேஞ்சர் படத்தின் வேளைகளில் மும்மரமாக இருக்கிறார்.
ஒரு பக்கம் இந்தியன் 2 ப்ரோமோஷன் வேளைகளிலும் மும்மரமாக இருக்கிறார். கேம்சேஞ்சர் படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில் கியாரா அத்வானி, ஜெய்ராம், நவீன் சந்திரா, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் ராம்சரண் நடிக்கும் கதாபாத்திரம் தான் முக்கியமான கதாபாத்திரம் அவர் தான் ஹீரோ என படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்து இருக்கும் சூழலில், இயக்குனர் ஷங்கர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா தான் மெயின் ரோல் என்று கூறியுள்ளார். ஷங்கர் பேசியதை பார்த்த ராம் சரண் ரசிகர்கள் என்னங்க சொல்றீங்க என்பது போல அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் சென்னையில் நடந்த செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய ஷங்கர் ” எஸ்.ஜே.சூர்யா இந்தியன் 2-வில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்தியன் 2-வில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேம்சேஞ்சர் படத்தில் அவர் தான் மெயின் ரோலில் நடித்துள்ளார் ” எனவும் ஷங்கர் கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் அப்போ ராம் சரண் ஹீரோ இல்லையா என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…