தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என களமிறங்கியவர் எஸ்.ஜே.சூர்யா. நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் படங்களை இயக்க தொடங்கினார். அதன்படி , விஜய் வைத்து குஷி, அஜித்தை வைத்து வாலி ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதன்பின், அவரே இயக்கி ” நியூ” படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இறைவி திரைப்படம் மூலம் மீண்டும் நடிப்புக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார்.
பிறகு, ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் வில்லனாகவும் தான் ஒரு அசுர நடிகர் என்பதை காம்பித்து விட்டார். தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் விஷாலிற்கு வில்லனாக நடித்து வருகிறார்.
என்னதான், எஸ்ஜேசூர்யா வில்லனாக நடித்து வந்தாலும், பல ரசிகர்கள் வாலி, குஷி, போன்ற ஹிட் படங்களை இயக்கி மீண்டும் ஒரு பெரிய ஹீட் கொடுப்பாரா என காத்துள்ளனர். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அது என்னவென்றால், எஸ்ஜேசூர்யா அடுத்தாக ஒரு திரைப்படத்தை இயக்கி அதில் அவரே நடிக்கவுள்ளாராம். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு கார் பங்கேற்ற உள்ளதாகவும், அந்த கார் வெளிநாட்டில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
படத்திற்கு “கில்லர்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அழகான ஒரு புது ஹீரோயினை தமிழ் சினிமாவிற்குஅறிமுகப்படுத்தவுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா. இவர் கடைசியாக இயக்கி நடித்த இசை திரைப்படத்திலும் புதுமுக ஹீரோயினை அறிமுகப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…