வருடம்தோறும் தீபாவளியை முன்னிட்டு தமிழில் பல பெரிய படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படமும் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதில் சர்தார் திரைப்படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். படத்தில் ராசி கண்ணா, லைலா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- வாலி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான்.! வருத்தப்பட்ட பிரபல முன்னணிநடிகை.!
படத்திற்கான டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. ட்ரைலரில் அதிரடி சண்டைக்காட்சிகள், ஜிவியின் துள்ளலான பின்னணி இசை காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியுள்ளது.
மேலும், இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய கார்த்தி ” இந்த தீபாவளி அன்று இரண்டு படங்கள் வெளியாகிறது. ஒன்னு என்னோட சர்தார்.. இன்னொன்னு சிவகார்திகேயனோட பிரின்ஸ்.. இரண்டு படங்களும் கண்டிப்பாக வெற்றிபெறவேண்டும். சினமா ஆரோக்கியமாக உயர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் கார்த்தி.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…