சிவகார்த்திகேயன் படமும் ஹிட் ஆக வேண்டும்.! பெருந்தன்மையுடன் பேசிய கார்த்தி.!

Default Image

வருடம்தோறும் தீபாவளியை முன்னிட்டு தமிழில் பல பெரிய படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படமும் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Prince Vs Sardar
Prince Vs Sardar [Image Source: Twitter]

இதில் சர்தார் திரைப்படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன்  இயக்கியுள்ளார். படத்தில் ராசி கண்ணா, லைலா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- வாலி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான்.! வருத்தப்பட்ட பிரபல முன்னணிநடிகை.!

SardarTrailer
SardarTrailer [Image Source: Twitter]

படத்திற்கான டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. ட்ரைலரில் அதிரடி சண்டைக்காட்சிகள், ஜிவியின் துள்ளலான பின்னணி இசை காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியுள்ளது.

Karthi About Prince Moive
Karthi About Prince Moive [Image Source: Twitter]

மேலும், இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய கார்த்தி ” இந்த தீபாவளி அன்று இரண்டு படங்கள் வெளியாகிறது. ஒன்னு என்னோட சர்தார்.. இன்னொன்னு சிவகார்திகேயனோட பிரின்ஸ்.. இரண்டு படங்களும் கண்டிப்பாக வெற்றிபெறவேண்டும். சினமா ஆரோக்கியமாக உயர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் கார்த்தி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்