சிவகார்த்திகேயன் நிச்சயம் பான் இந்தியா நடிகராக உயர்வார்.! பிரபல இயக்குனர் புகழாரம்…
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு குடும்ப ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிவிட்டார். நடிப்பதை தவிர்த்து பல நல்ல உதவிகளையும் சிவகார்த்திகேயன் வெளியில் தெரியாமல் செய்து வருகிறார்.
எந்த அளவிற்கு தனக்கு வெற்றி வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் எளிமையாகவே இருக்கிறார். இதனால் பலரும் சிவகார்த்திகேயனை பற்றி பெருமையாக பேசுவது உண்டு. அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- என் முதல் ராத்திரி இவரோடு தான்.! மனம் திறந்து உண்மை கூறிய ஷகீலா.!
இது குறித்து பேசிய மிஷ்கின் ” சிவகார்த்திகேயனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ரொம்ப ரொம்ப நல்ல பையன். அவர் ஒரு சிறந்த நடிகராக மட்டுமின்றி, நல்ல மனிதர். மிகவும் எளிமையாக இருக்கிறார். அவர் நிச்சயம் பான் இந்தியா நடிகராக உயர்வார்.
நான் அவர் நடித்து வரும் மாவீரன் படத்தில் மெயின் வில்லனாக நடிக்கிறேன். படத்தில் MLA கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஒரு முறை எனக்கு சிவகார்த்திகேயன் கால் செய்து அண்ணா ஒரு வில்லன் கதாபாத்திரம் பண்ணனும் என்று சொன்னார். நான் பண்ணுறேன் செல்லம் என்று சொன்னேன்” எனவும் தெரிவித்துள்ளார்.