Categories: சினிமா

#1YearofPrince: வெளிநாட்டு நடிகையுடன் டூயட் செய்து பாக்ஸ் ஆபிஸில் கோட்டைவிட்ட சிவகார்த்திகேயன்!

Published by
கெளதம்

இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு 21 அக்டோபர் அன்று இதே தேதியில் திரையரங்குகளில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இன்றுடன் இந்த திரைப்படம் ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது.

இந்த படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியாபோஷப்கா என்பவர் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் காமெடி காட்சிகள் சரியாக மக்கள் சிரிக்கும் படி அமையாததால், படம் தோல்வியடைந்தது என்றே கூறலாம். மேலும், வெளிநாட்டு பெண்ணை காதலிக்கும் இந்திய காதலனை மையமாக வைத்து எடுப்பதற்காக, உக்ரைன் நடிகையை ஒப்பந்தம் செய்தனர்.

#8YearsOfNaanumRowdyDhaan : நயன்தாரா விக்கிக்கு ரொம்ப ஸ்பெஷல்! ‘நானும் ரவுடி தான்’ உருவான கதை!

படத்தின் கதைப்படி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் (சிவகார்த்திகேயன்) தனது பள்ளியில் பணிபுரிந்து வரும், பிரிட்டிஷ் ஆசிரியை (மரியா ரியாபோஷப்கா) காதலிப்பதற்கு அவரது குடும்பம் மற்றும் ஊர் மக்கள் எதிர்க்கும் கதைதான் படத்தின் ஒன்லைன்.

பிரின்ஸ் பாக்ஸ் ஆபிஸ் 

இப்படி, 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த உலக  முழவதும் ரூ.40 கோடி மட்டுமே வசூலித்தாக சொல்லப்படுகிறது. அதன்படி, சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் மட்டுமே ரூ. 30 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ரூ.25.25 கோடி வசூலித்ததாகவும், ஆந்திராவில் ரூ.5.65 கோடி, கர்நாடகா ரூ.1.00 கோடி கேரளா மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் சேர்த்து ரூ.1 கோடி எனவும், வெளிநாட்டில் ரூ.8.10 கோடி என வசூலித்து மொத்த உலகவில் ரூ40.50 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி வசூல் 

ஆனால், பிரின்ஸ் படத்திற்கு முனதா நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ.100 கோடி வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது.

தொடர்ந்து ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் மிஸ் செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால், கடைசியாக சிவகார்த்திகேயன்நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரூ.90 கோடியை எட்டியது குறிப்பிடத்க்கது.

Published by
கெளதம்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

7 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

9 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

10 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

11 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

12 hours ago