நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பிரின்ஸ். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இப்படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கி இருந்தார்.
படத்தில் காமெடி காட்சிகள் சரியாக மக்கள் சிரிக்கும் படி அமையாததால் படம் தோல்வியடைந்தது என்றே கூறலாம். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை 40 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது.
இதையும் படியுங்களேன்- இந்த பொங்கல் “துணிவு” பொங்கல் தான்…’அஜித்’ கொடுத்த நம்பிக்கை..?
மேலும், இந்த திரைப்படத்தின் தமிழகம் திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்று வாங்கி வெளியிட்டது. இதனையடுத்து, ‘பிரின்ஸ்’ படத்தின் தோல்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு ரூ.12 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். எனவே, இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.3 கோடியும், தயாரிப்பு நிறுவனம் ரூ.3 கோடி என மொத்தம் ரூ.6 கோடி நஷ்ட ஈடாக வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…