sivakarthikeyan about soori [file image]
சென்னை : கொட்டுக்காளி படத்தினை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்குக் கால் செய்து பாராட்டிப் பேசியுள்ளார்.
சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சூரி மும்மரமாக இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது ‘கொட்டுக்காளி’ படத்தினை பார்த்து விட்டு சிவகார்த்திகேயன் அவரிடம் கூறிய விஷயத்தை அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்துப் பேசிய சூரி ” சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நான் ஒரு படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எனக்கு ஆரம்பத்தில் நல்ல நண்பராக இருந்தார். அதன்பிறகு அண்ணன் -தம்பியாக மாறினோம். என்னுடைய தம்பி தயாரிப்பில் நான் ஒரு படத்தில் நடித்தேன் என்பது மிகவும் பெருமையான விஷயம்” எனவும் நெகிழ்ச்சியாகப் பேசினார் சூரி.
தொடர்ந்து பேசிய சூரி ” தம்பி சிவகார்த்திகேயன் ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்துவிட்டு எனக்குக் கால் செய்து “என்ன அண்ணா இப்படி நடிச்சிருக்கீங்க? படத்தில் உங்களுடைய நடிப்பைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. அண்ணா இவ்வளவு நடிப்பு உங்களுக்குள் இருக்கிறதா? ” என சிவகார்த்திகேயன் அசந்து போய் கேட்டதாகவும் சூரி கூறினார்.
சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல் அவருடைய குடும்பமும் படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய நடிப்பைப் பாராட்டியதாக சூரி கூறினார். அதனைப் பற்றிய பேசிய அவர் ” சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி என்ன அண்ணா இப்படி வேறு மாதிரி நடிச்சிருக்கீங்க? படம் நன்றாக இருக்கிறது” என பாராட்டியதாகச் சூரி நெகிழ்ச்சியாகப் பேசினார்.
அது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் சூரியின் நடிப்பைப் பார்த்து வியந்து ” இப்படி ஒரு பெரிய நடிகர் தோதாத்திரியைத் தான் நான் கலாய்த்துக் கொண்டு இருந்தேனா? இப்படியான நடிப்பை வைத்துக்கொண்டா என்னிடம் நீங்கள் நடித்தீர்கள்? படத்தில் உங்களுடைய நடிப்பு மிகவும் அருமை” எனப் பாராட்டியதாகவும் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக அந்த பேட்டியில் தெரிவித்தார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள ‘கொட்டுக்காளி’ படத்தினை சிவகார்த்திகேயன் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…