திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் முருகன் கோயிளுக்கு தனது குடும்பத்துடன் சென்று சாமியை வழிபாடு செய்துள்ளார். சிவகார்த்திகேயனை கோவிலில் பார்த்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக அவரை சுற்றி கூடினார்கள்.
சில தங்களுடைய போனை எடுத்து சிவகார்த்திகேயனுடன் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்துக்கொண்டார்கள். அவரும் அங்கிருந்த அனைவர்க்கும் கையை அசைத்துவிட்டு தரிசனத்தை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பினார்.
மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து முதல் பாடல் நேற்று தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…