சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு SK21வது படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு.!
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் SK21. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்க மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்காலிகமாக SK21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தப்படம் குறித்த அப்டேட் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சிவகார்த்திகேயன் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பிப்ரவரி 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் டைட்டில் மற்றும் டீசர் பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் அறிவித்துள்ளனர்.
#SK21 Title Teaser on 16th Feb at 5PM ????#HeartsonFirepic.twitter.com/m2hN1wPcok#Ulaganayagan @ikamalhaasan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM @khanwacky #CHSai @rajeevan69 #StefanRichter…
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 12, 2024
திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது தெரிகிறது. மேலும், இந்த் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியும் கணவன் மனைவியாக நடிப்பதும், அவர்ககேள் இருவருக்கும் குழந்தையாக ஒரு பெண் குழந்தை நடிப்பதாக கூறப்படுகிறது.